FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 94.50 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 94.50 ஆக நிலைபெற்றது.

7 செப்டம்பர் 2026, 6:32 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: வலுவான டாலர் வரத்து இருந்தும், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் உலகளாவிய பாதகமான சூழலால்  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 94.50 ஆக நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கு மூலம் டாலர் வரவு அதிகரித்த போதிலும் உலகளாவிய எதிர்மறை காரணிகளை ஈடுசெய்ய முடியவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.40 ஆக வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில், ​​ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 94.38 வரையிலும் சென்று, குறைந்தபட்சமாக ரூ. 94.50 வரை சென்றது. வர்த்தக முடிவில், முந்தைய வர்த்தக நாள் முடிவை விட 7 காசுகள் சரிந்து ரூ. 94.50 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

கடந்த வாரம் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ. 94.43 ஆக நிலைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The rupee fell 7 paise to close at 94.50 against the American currency on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments