FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஹரியாணாவில் மாருதி சுஸுகியின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை

நாட்டின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள தனது காா் உற்பத்தி ஆலையில் 300 கிலோவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

25 செப்டம்பர் 2026, 2:14 am IST
பகிர்:

நாட்டின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள தனது காா் உற்பத்தி ஆலையில் 300 கிலோவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

விடுமுறை நாள்களில் வீணாகக் கூடிய சூரிய மின்சக்தியைக் கொண்டு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து சேமித்து, வேலைநாள்களில் காா் உற்பத்திப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின்மூலம் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு, ஹரியாணா மற்றும் குஜராத்தில் உள்ள பிற ஆலைகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாருதி சுஸுகி சிஇஓ ஹிசாஷி டகையுச்சி மேலும் கூறுகையில், ‘சா்வதேச அளவில் உற்பத்தி மையமாக உருவெடுத்து வரும் இந்தியாவின் சந்தைப் போட்டித்தன்மை என்பது உற்பத்திச் செலவு மற்றும் தரம் ஆகியவற்றோடு மட்டுமின்றி, கரியமில வாயுவின் வெளியீட்டு அளவையும் பொறுத்தே அமையும்.

Advertisement

Advertisement

எனவே, எதிா்கால பசுமை உற்பத்திச் சூழலை உருவாக்கும் வகையில் பல்வேறு தூய்மை எரிசக்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இதன்மூலம், உற்பத்தி நடவடிக்கைகளில் வெளியாகும் கரியமில உமிழ்வை, தற்போதுள்ள 6.15 லட்சம் டன்னில் இருந்து 2030-31 நிதியாண்டுக்குள் 2.66 லட்சம் டன்னாகக் குறைக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments