FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிவு! காரணம் என்ன?

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியடைந்தது பற்றி...

24 செப்டம்பர் 2026, 3:56 pm IST
பங்குச்சந்தை - IANS
பகிர்:

இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் இன்று (செப். 24) பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,272.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. தொடர்ந்து வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,247.71 புள்ளிகள் சரிந்து 73,580.54 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 383.70 புள்ளிகள் சரிந்து 23,063.10 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ் 5% வரை வீழ்ச்சியடைந்தது. ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பின்சர்வ் 3 - 4% வரை சரிவைச் சந்தித்தன. இண்டிகோ, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ட்ரெண்ட் ஆகியவற்றின் பங்குகள் 1 முதல் 2% வரை சரிந்தன.

நிஃப்டி50 குறியீட்டில் சிப்லா மட்டுமே லாபமடைந்தது. ஹெச்டிஎப்சி லைப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி அதிக நஷ்டமடைந்த நிறுவனங்களாகும். நிஃப்டியில் அனைத்துத் துறைப் பங்குகளும் சரிவில் முடிந்தன.

பங்குச்சந்தை சரிவு, ஏன்?

அமெரிக்காவில் வணிக நடவடிக்கைகள் கடந்த 5 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வலுவடைந்துள்ளன. அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களின் வருவாய் (yields) விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்துள்ளதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.87 ஆக சரிந்துள்ளதும் இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

summary

Stock market crash today: Sensex tanks over 1,200 points, Nifty goes below 23,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments