எதுக்கு ஓய்ச்சல் ஒழிவின்றி உடம்பை கெடுத்துக் கொள்கிறாய்?
மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் நடித்த படங்கள் என்றால் நான் ஒன்றைக்கூட பார்க்காமல் விடுவதில்லை.
மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் நடித்த படங்கள் என்றால் நான் ஒன்றைக்கூட பார்க்காமல் விடுவதில்லை. சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவருடைய படங்கள் என்றால் தவற விடுவதே இல்லை. உண்மையை மனம் விட்டு சொல்கிறேன். என் தந்தையை அவர் தம்பி என்றுதான் பாசத்தோடு அழைப்பார். என் தந்தையும் அவரை தன்னுடைய மூத்த அண்ணனாக கருதி ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது நண்பர்களுக்கு தெரியும். அவருக்கு தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் படம் எடுத்தால், அதில் நல்ல கேரக்டர்கள் இருந்தால் என் தந்தைதான் நடிப்பார்.
முதன்முதலில் டைரக்டர் பாரதிராஜாவினால் ' அலைகள் ஓய்வதில்லை' படத்தினில் நடிக்கின்ற பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப் படத்தை என் தந்தையார் முதலில் மக்கள் திலகத்திற்குத்தான் போட்டுக் காட்டி, அவருடைய ஆசி எனக்கும் மற்ற கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று கருதினார். மக்கள் திலகம் படத்தை வந்து பார்த்து விட்டு, டைரக்டர் பாரதிராஜாவையும் மற்ற கலைஞர்களையும் என்னையும் ஒவ்வொரு காட்சியாக ரசித்து பாராட்டியதை மறக்கவே முடியாது.
'அலைகள் ஓய்வதில்லை' வெள்ளி விழாவிலும்கலந்து கொண்டு பரிசுக்கேடயங்களை அவரது பொன்னான கரங்களால் வழங்கியதுடன் மட்டுமின்றி, எனக்கு அறிவுரையும் கூறினார்.
Advertisement
Advertisement
நான் பல படங்களில் தொடர்ந்து இரவு பகலாக கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சலினால் வீட்டில் ஓய்வாக இருக்க நேர்ந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் வீட்டில் போன் மணி அடித்தது.
எதுக்கு ஓய்ச்சல் ஒழிவின்றி வேலை பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்கிறாய்? உடல்நிலைதான் முக்கியம். அது நன்றாக இருந்தால்தான் நிம்மதியாக தொழில் செய்ய முடியும். மார்க்கெட் போனாலும் பிடித்துக்கொள்ள முடியும். ஆனால் 'ஹெல்த்' மிகவும் முக்கியம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போனில் மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் தான் உரிமையோடு இப்படி என்னை கடிந்து கொண்டார்.
அவர் மீது எனக்கு இருந்த மதிப்பு மரியாதையை இது மேலும் பன் மடங்காக்கி விட்டது. அவர் போல் இதற்கு முன்னாலும் சரி, பிற்காலத்திலும் சரி யாரும் இருக்கவே முடியாது.
பேட்டி: நாகை தருமன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.09.82 இதழ்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.