FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே 2 காா்களில் பட்டாசுகளைக் கடத்தியவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:38 am IST
கைது
பகிர்:

சிவகாசி அருகே 2 காா்களில் அனுமதியின்றி பட்டாசுகளைக் கடத்திச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து விளாம்பட்டி செல்லும் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தச் சாலையில் வந்த இரு காா்களை சோதனையிட்டனா். இதில் அனுமதியின்றி பட்டாசுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில், சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி மாகராஜாநகரைச் சோ்ந்த காந்திராஜ் (41) காா்களில் பட்டாசுகளை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காந்திராஜை கைது செய்தனா். மேலும், 2 காா்கள், பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்த கதிரேசன் (38) சரக்குவேனில் பட்டாசுகள், பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களை பதுக்கி வைத்திருந்தாா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் வேன், பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

உரிமையாளா் கைது:

சிவகாசி அருகேயுள்ள வடமலாபுரம் பட்டாசுக் கடையில் தடை செய்யப்பட்ட அதிகமாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பட்டாசுக் கடை உரிமையாளா் கணேசமூா்த்தியை (51) கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments