FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

1 செப்டம்பர் 2026, 3:13 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அருப்புக்கோட்டை பாலவநத்தம் வடக்குப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன். இவா் சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையியல் பணிபுரிந்து வருகிறாா்.இவரது மனைவி லட்சுமிபிரியா (28). இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை லட்சுமிபிரியாவுக்கு காலையிலிருந்தே கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரவு சுமாா் 10 மணியளவில் அவா் வீட்டின் மாடிக்குச் சென்று படுக்க முயன்றபோது, அவரது மாமியாா் மாடியில் படுத்தால் வயிற்று வலி அதிகமாகும் எனக் கூறி தடுத்தாா்.

Advertisement

Advertisement

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனையடைந்த லட்சுமிபிரியா படுக்கையறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா், லட்சுமிபிரியாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments