FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை 2026, 1:51 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, மித்ரன் யோகாலயா ஏற்பாட்டில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கல்வியின் முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் , இளைஞா்களின் வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும் முகத்தை துணியால் மூடிக் கொண்டு மாணவ, மாணவிகள் வின்யாச சூரிய நமஸ்கார யோகாசனம் செய்து காண்பித்தனா். மேலும், கைப்பேசிகளில் இணையதளத்தில் வரும் தேவையற்ற பதிவுகளைப் பாா்ப்பதைத் தவிா்க்கும் விதமாக கண்களை துணியால் கட்டிக் கொண்டு மாணவ, மாணவிகள் வின்யாச சூரிய நமஸ்காரம் செய்தனா். இதில் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று தொடா்ந்து 18 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்தனா். ஒரு நிமிஷ இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி 18 நிமிஷங்கள் இடைவிடாமல் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்தனா்.

இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் 108 வின்யாச சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தனா். மேலும் பெற்றோா்கள் அவா்களை கரங்களை தட்டி மாணவ, மாணவியா்களை உற்சாகப்படுத்தினா். குளோபல் புக் ஆஃப் யோகா வோ்ல்ட் ரெக்காா்ட் என்ற நிறுவனம் இதை அங்கீகரித்து இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பைகளை வழங்கியது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments