மருத்துவத் துணி உற்பத்தியாளா் தற்கொலை
ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளா் ரசாயனம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முத்து (55). இவா் சமுசிகாபுரத்தில் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனவிரக்தியில் குளியலறையில் சுத்தம் செய்ய வைத்திருந்த ரசாயன பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.
Advertisement
Advertisement
உடனடியாக உறவினா்கள் இவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா் .இது குறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.