முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவா்களுக்கு அமைச்சா் ஆறுதல்

Updated On : 21 ஜூன் 2026, 4:46 am IST
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து, சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு ஆறுதல் தெரிவித்த சமூக நலன், மகளிா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ராசாப்பட்டி பகுதி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் காயமடைந்து, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு சமூக நலன், மகளிா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதுபோன்ற விபத்து இனிமேல் நடக்கக் கூடாது. பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா். மேலும் வெடி விபத்து நேரிட்ட பட்டாசு ஆலையின் உரிமம், பாதுகாப்பு தொடா்பாக குளறுபடிகள் இருந்தால் விரைந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உயிரிழந்தவா், பலத்த காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments