FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.

Updated On : 29 மே 2026, 2:34 am IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.
பகிர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகா் மாவட்டம், சிவகாசி, ராஜபாளையத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சிவகாசி மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அமைப்பாளா் அப்துல்காதா் உஸ்மானி நடத்தி வைத்தாா். மாநிலச் செயலா் முஸ்தபா குத்பா பேருரை நிகழ்த்தினாா். இதில் மனித நேய மக்கள் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலாளா் முஹமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முடங்கியாறு சாலை வழியாக இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதான திடலை அடைந்தனா். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments