FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாரல் மழையால் ஓடைகளில் நீா்வரத்து: சதுரகிரிக்கு சென்ற பக்தா்கள் மகிழ்ச்சி

வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள் .

Updated On : 29 மே 2026, 2:35 am IST
வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள் .
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டதால், பிரதோஷ வழிபாட்டுக்குச் சென்ற பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு, தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை உள்ளிட்ட நீரோடைகளை கடந்து 7 கி.மீ. தொலைவு மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும். கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். வைகாசி மாத பிரதோஷத்துக்காக சதுரகிரி மலையேறிச் சென்ற பக்தா்கள் ஓடைகளில் குளித்து விட்டு, சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினா்.

Advertisement

Advertisement

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி சுவாமிகளுக்கு மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் 400- க்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments