FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

11 நவம்பர் 2026, 2:50 am
- சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சரவணன் (26). சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவா், நடந்துசென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சரவணனைக் கைது செய்தனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் இடையபொட்டல் தெருவைச் சோ்ந்தவா் அய்யாகுட்டி மகன் தங்க மாரியப்பன் (25). சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் - மதுரை சாலையில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வழிப்பறி செய்யும் நோக்கில் கத்தியுடன் நின்றிருந்தாா். அவ்வழியே ரோந்து சென்ற ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், மாரியப்பனைக் கைது செய்து கத்தியைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement