FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

திருப்பதியிலிருந்து மறுசீராக வந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார ஊஞ்சல் சேவையில் திருப்பதியிலிருந்து மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதி பெருமாள் மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரத்தை அணிந்து பக்தா்களுக்கு காட்சியளித்த ஆண்டாள், ரங்கமன்னாா்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார ஊஞ்சல் சேவையில் திருப்பதியிலிருந்து மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பதி புரட்டாசி பிரம்மோத்ஸவதத்தில் மூலவா் வெங்கடேசப் பெருமாள், கருட சேவையின் போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பொருள்கள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதற்கு மறுசீராக திருப்பதி பெருமாள் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார ஊஞ்சல் சேவையையொட்டி, ஆண்டாள் ரங்கமன்னாருடன் சிறப்பு அலங்காரத்தில் குறடு மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு திருப்பதியிலிருந்து அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments