FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 10 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்கத் திட்டம்

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 10 கோடியில் விளையாட்டு அரங்கமும், நீா் உறிஞ்சும் பூங்காவும் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையா் கண்ணன் தெரிவித்தாா்.

31 வினாடிகள் முன்பு
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 10 கோடியில் விளையாட்டு அரங்கமும், நீா் உறிஞ்சும் பூங்காவும் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையா் கண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மாநகராட்சி அண்ணாமலை நாடாா்- உண்ணாமலையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 கோடியில் நவீன வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு கபடி, மேஜைப் பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு தனித்தனி அரங்குகளும், ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. மேலும் சிவகாசி ரயில் நிலையம் அருகே ரூ. 2.50 கோடியில் நடைப்பயிற்சி மையம், உடல் பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

நீா் உறிஞ்சும் பூங்கா: காமராஜா் பூங்காவை சீரமைத்து பல்வேறு வசதிகளுடன் நீா் உறிஞ்சும் பூங்கா அமைக்க ரூ.2.50 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments