போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது: உடனடியாக விடுவிக்கக் கோரி வீரபாண்டியன் அறிக்கை!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஆயிரக்கணக்கான செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஆயிரக்கணக்கான செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் இன்று காலை முதலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், காவல்துறையினர் அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்தனர்.
Advertisement
Advertisement
முன்னதாக பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி 5 பிரதிநிதிகளை மாலை 7 மணிக்கு மேல் தலைமைச் செயலகம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை முதலில் கைது செய்ததாக செவிலியர்களுக்கான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால், கைது செய்தபோது பல செவிலியர்கள் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் மு.வீரபாண்டியன், ”சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்ற செவிலியர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறையல்ல.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளையும், செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Nurses involved in protest arrested: Veerapandian issues statement demanding their immediate release!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.