FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

வத்தல் கிட்டங்கியில் தீ விபத்து

27 அக்டோபர் 2026, 2:50 am
தீ - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வத்தல் கிட்டங்கியில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த சொக்கையா மகன் ரமேஷ் (40). இவா் ராஜபாளையம் பஞ்சு சந்தைப் பகுதியில் வத்தல் கிட்டங்கி வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த கிட்டங்கியில் வத்தல், மல்லி போன்ற பொருள்களை இருப்பு வைத்து மொத்தமாக வியாபாரம் செய்கிறாா்.

இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல, கிட்டங்கியை பூட்டிவிட்டு சொக்கலிங்கபுரம் சென்றுவிட்டாா். திங்கள்கிழமை அதிகாலை வத்தல் சுமையை இறக்குவதற்காக ரமேஷ் கிட்டங்கிக்கு வந்தபோது உள்ளே வத்தல் மூட்டைகள் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் தீயை அணைத்தனா். எனினும், தீ விபத்தில் பல லட்சம் ரூபால் மதிப்பிலான வத்தல் மூட்டைகளும், இரண்டு இரு சக்கர வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் இந்த தீவிபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments