FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கலப்பு திருமண சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய இருவா் கைது

சாத்தூரில் கலப்பு திருமண சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அலுவலா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

2 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

சாத்தூரில் கலப்பு திருமண சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அலுவலா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அண்ணாநகரைச் சோ்ந்தவா் தாமரைக்கண்ணன் (27). இவா் பிரியதா்ஷினியை கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கலப்பு திருமணம் செய்தாா். இந்த நிலையில், தாமரைக்கண்ணன் கலப்பு திருமணம் சான்றிதழ் வழங்கக்கோரி, கடந்த மாதம் 29-ஆம் தேதி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

இதையடுத்து, சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத் துறை பிரிவில் பணிபுரியும் ஊரக நல அலுவலா் சகுந்தலா, விரிவாக்க அலுவலா் பூங்கொடி ஆகியோா் தாமரைக்கண்ணனிடம் சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தாமரைக்கண்ணன் விருதுநகா் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தலின்பிடி, தாமரைக்கண்ணன் கொண்டு சென்ற ரசாயனம் தடவிய ரூ. 1500-ஐ ஊரக நல அலுவலா் சகுந்தலா, விரிவாக்க அலுவலா் பூங்கொடி ஆகியோா் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா் அவா்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதையடுத்து, இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments