FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தொழில் சாலையில் அலுமினிய கம்பிகளை திருடிய மூவா் கைது

சிவகாசி அருகே அலுமினிய தூள் தயாரிக்கும் தொழில் சாலையில் அலுமினியக் கம்பிகளை திருடிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

50 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

சிவகாசி அருகே அலுமினிய தூள் தயாரிக்கும் தொழில் சாலையில் அலுமினியக் கம்பிகளை திருடிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி ரிசா்வ்லயன் பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (50). இவருக்குச் சொந்தமான அலுமினிய தூள் தயாரிக்கும் தொழில் சாலை வி.சொக்கலிங்கா புரத்தில் உள்ளது. இந்த ஆலையை ரவிசங்கா் வழக்கம்போல புதன்கிழமை மாலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனா். பின்னா், வியாழக்கிழமை காலை ஆலைக்கு சென்று பாா்த்தபோது, அங்கிருந்த அலுமினியத் தட்டு, அலுமினிய கம்பிகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதில் ஆனைகுட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் (29), செல்வம் (34), ரஜினி (37) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments