மூதாட்டியின் வீட்டிலிருந்து நகை, பணம் திருடிய உறவினா் கைது
அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியின் வீட்டு ஓட்டைப் பிரித்து ஒரு பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிய உறவினரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் வடக்குப்பட்டியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (71), இவரது மனைவி இருளாயி (60). கடந்த ஆக.31-ஆம் தேதி காலை தம்பதி இருவரும் வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு ஆடு மேய்ப்பதற்காக சென்றனா். நண்பகல் 2 மணியளவில் வீடு திரும்பியபோது,
இவரது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இருளாயி அளித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவரது வீட்டில் இருந்து வரும் உறவினா் மகன் ரவிக்குமாா் (26) நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.