FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

காமராஜரின் கருணை உள்ளம்..

பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Updated On : 13 நவம்பர் 2023, 5:06 am IST
பகிர்:


பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  அவருடைய நண்பர் பி.எஸ்.ராமசாமி என்பவரின் வீட்டில் காமராஜர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவரும் இளம்வயதிலிருந்தே நண்பர்கள்.
காமராஜர் காலையில் எழுந்தவுடன் காபி குடித்தார். பின்னர், ராமசாமி வீட்டில் பலவித சிற்றுண்டிகளுடன் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குளித்துவிட்டு வந்த காமராஜரிடம், ''ஐயா.. சாப்பிட வரணும்'' என்று ராமசாமி வேண்டினார். 
''ராமசாமி முன்பு நம்ப வீட்டில் நான் விரும்பிச் சாப்பிடுவேனே  பழைய சாதமும், ஊறுகாயும் அதுதான் இப்போ வேணும்'' என்றார் காமராஜர்.
ராமசாமி தயங்கியபடியே , ''ஐயா. உங்களுக்காக இட்லி, வடை, பூரி, கேசரி.. என்று ஏகப்பட்ட அயிட்டங்கள் தயாராயிருக்கு. நீங்க அதையெல்லாம் சாப்பிட்டாதான் எங்க வீட்டு மனிதர்கள் சந்தோஷப்படுவாங்க?'' என்றார்.
உடனே காமராஜர், ''ராமசாமி. எனக்கு பழைய சாதமும், ஊறுகாயும் வேண்டும். இருக்கா?, இல்லையா?'' என்று குரலில் கொஞ்சம் கடுமையை வரவழைத்துகொண்டு சொன்னார்.
இதையடுத்து ராமசாமி படபடப்புடன், ''ஐயா.. எப்பவும் காலையில் நம்ம வீட்டில் பழைய சாதம், கட்டித் தயிர், ஊறுகாய் இருக்கும்'' என்றார்.
காமராஜர் விரும்பியபடியே உணவும் பரிமாறப்பட, விரும்பி சாப்பிட்டார்.
தனது தாய் சிவகாமியின் செலவுக்கு காமராஜர் மாதம்தோறும் ரூ.120 மட்டுமே அனுப்புவார். அதுவும் பொடிக்கடை தனுஷ்கோடி நாடார் கடைக்குதான் மணியார்டரில் அனுப்புவார். இந்தப் பணத்தில் தான் மின்கட்டணமும், தண்ணீர் வரியும் கட்டிக் கொள்ள வேண்டும்.  
காமராஜர் சென்னையில் இருந்த காலங்களில் சிவகாமி அம்மாள் சென்னைக்கு வந்தது ஐந்துமுறைகள்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments