தாய் மண்ணே வணக்கம்...
அமேசான் நிறுவனத்தில் கிளவுட் பொறியாளராகப் பணியாற்றி, ஆண்டுக்கு சுமார் ரூ.46 லட்சம் வருமானம் பெற்றுக் கொண்டிருந்தவர் இருபத்து ஏழு வயதான ஷர்தேந்து திவாரி.
அமேசான் நிறுவனத்தில் கிளவுட் பொறியாளராகப் பணியாற்றி, ஆண்டுக்கு சுமார் ரூ.46 லட்சம் வருமானம் பெற்றுக் கொண்டிருந்தவர் இருபத்து ஏழு வயதான ஷர்தேந்து திவாரி. இவர் அந்தப் பணியை அண்மையில் உதறிவிட்டு, பிகார் மாநிலத்தில் கயாவில் செயல்படும் அதிகாரிகள் பயிற்சி அகாதெமி'யில் இந்திய ராணுவ அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ராணுவப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தொழில்நுட்ப நுழைவுத் திட்ட முறையில் எட்டாவது முறையிலான முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் திட்டம் அவரது தொழில்நுட்பப் பின்னணியை ராணுவப் பணியுடன் இணைக்க உதவும். அவர் கூறியது:
சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள பைபர்கான் கிராமத்தைச் சேர்ந்த நான், லக்னௌவின் நீல்மதாவில் வளர்ந்தேன். ஹரியானாவின் சண்டிமந்திரில் கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தேன். ஐ.ஐ.டி. மாண்டியில் பி.டெக் பட்டமும், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் பாதுகாப்பில் எம்.டெக். படிப்பையும் நிறைவு செய்தேன்.
Advertisement
Advertisement
எனது தந்தை, ராஜ் குமார் திவாரி 36 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். சாகச வாய்ப்புகள், களப் பணிகள் ஆகியவைதான் என்னை ராணுவத்தை நோக்கி ஈர்த்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் மூத்த பொறியாளராகப் பணியில் சேர்ந்தேன். இருந்தாலும், ராணுவத்தில் சேரவேண்டும் என்ற எண்ணம் விரட்டிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் ஏர்பஸ் போன்ற விண்வெளித் துறை நிறுவனத்திடமிருந்து வந்த பணிவாய்ப்பையும் நான் ஏற்கவில்லை. அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.46 லட்சம் வருமானத்தில் வேலையில் சேர்ந்தும், ராணுவப் போட்டித் தேர்வுகளுக்காக என்னை தயார் செய்தேன். ராணுவத்தில் போர் பொறியாளராக வாய்ப்புக் கிடைத்தபோது, எதையும் யோசிக்காமல் சேர்ந்தேன் என்கிறார் ஷர்தேந்து திவாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.