முகப்பு
இளைஞர்மணி

கணினி முடிவெடுத்தால்...உங்களுக்கு வேலை!

வேலைவாய்ப்பு பெறுவதற்காக இன்றைய இளைஞர்கள் தங்களது வழக்கமான கல்வித் தகுதிக்கு மேல் புதிதாக பல தொழில் பயிற்சிகள் அல்லது தொழில்நுட்பப் பயிற்சிகளை பெறுகின்றனர்.

இளைஞர்மணி

கணினி முடிவெடுத்தால்...உங்களுக்கு வேலை!

வேலைவாய்ப்பு பெறுவதற்காக இன்றைய இளைஞர்கள் தங்களது வழக்கமான கல்வித் தகுதிக்கு மேல் புதிதாக பல தொழில் பயிற்சிகள் அல்லது தொழில்நுட்பப் பயிற்சிகளை பெறுகின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

வேலைவாய்ப்பு பெறுவதற்காக இன்றைய இளைஞர்கள் தங்களது வழக்கமான கல்வித் தகுதிக்கு மேல் புதிதாக பல தொழில் பயிற்சிகள் அல்லது தொழில்நுட்பப் பயிற்சிகளை பெறுகின்றனர். இதில், அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், வேலைக்கான விண்ணப்பத்தை சரியாக அமைக்கத் தெரியாவிட்டால், அவர்களுக்கு வேலை கிடைக்காது. 

காரணம், இன்று அனைத்து நிறுவனங்களும் விண்ணப்பங்களை இணையம் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும் என நிர்பந்திக்கின்றன. அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள மென்பொருளால் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கு ஏற்றாற்போல இல்லாத விண்ணப்பங்களை கணினியே நிராகரித்து விடுகிறது.

எனவே, நிறுவனங்களுக்கு ஏற்பவும், கணினி மென்பொருளுக்கு ஏற்பவும் விண்ணப்பங்கள் அமைவது மிக அவசியம். இதனாலேயே, இன்று பல கல்வி நிறுவனங்கள் கோர்ஸ் முடிந்த பிறகு, வேலைக்கான இணைய விண்ணப்பங்களை அனுப்புவது குறித்தும் மாணவர்களுக்கு தனியாகப் பயிற்சி அளிக்கின்றன.

இந்த நடைமுறையே இளைஞர்களிடம் இன்னும் சரியாக சென்றடையாத நிலையில், பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் நிறுவனங்கள் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டன. கணினி மென்பொருளால் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்களை அனுப்பிய இளைஞர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்துவதில் கணினி வழிமுறை தணிக்கை நுட்பத்தை (Algorithmic Auditing Technique) இன்று பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன. 

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உலகம் முழுவதும் பலகோடிப் பேர் வேலை தேடிக் கொண்டிருப்பது, குறைந்த காலியிடங்களுக்கு நிறையப் பேர் விண்ணப்பிப்பது ஆகியவை தொழில் நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான சரியான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. எனவே தங்களுடைய நிறுவனத்தின் வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களை வடிகட்ட, கணினி மென்பொருள் மூலம் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும் முறையை ஏற்படுத்தியிருக்கின்றன. 

தற்போது, இதற்கு அடுத்தகட்டமாக, பல பெருநிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அறிவாற்றல் நரம்பியல் (Cognitive Neuroscience), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), கணினி விளையாட்டு (Computer Games) உள்ளிட்ட நவீன முறைகள் மூலம் தாங்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் நபரின் திறனை உறுதிசெய்கின்றன.

Tesla, Google, Unilever, Carnival, Vodafone, Sonic Automotive, HBO, ORACLE, Discovery, Panda Express  உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் இந்த புதிய போக்கில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றன. இந்த நிறுவனங்களுக்காக Cognitive Neuroscience, AI, Gaming ஆகிய 3 வேலைகளையும் செய்து தரும் தளமாக Pymetrics என்ற startup நிறுவனம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய நரம்பியல் துறை நிபுணர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு Neuroscience எஹம்ங்ள் உருவாக்கப்பட்டுள்ளதாக பைமெட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தளத்தில் ஓர் இளைஞர் தொடர்ந்து செயல்படும்போது, அவருடைய அறிவாற்றல் மற்றும் ஆளுமைக்கான டிஎன்ஏ-வை கணக்கிடும் வகையிலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மூலம் (Machine Learning) இளைஞரின் வேலைத்திறன் பண்புகளை மதிப்பீடு செய்யும் வகையிலும் நரம்பியல் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வழக்கமான நேர்முகத் தேர்வில் காணப்படும் பாரபட்சம், பாலின பாகுபாடு போன்றவை வழிமுறை தணிக்கை நுட்பம் மூலம் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுகின்றன.

பைமெட்ரிக்ஸ் தளம் நிறுவனங்களுக்கு ஏற்ப இயங்கும்போது, ஒரு குறிப்பிட்ட பணிக்கு தகுதியில்லாத ஓர் இளைஞர், அதே நிறுவனத்தின் வேறொரு பணிக்கு தகுதியானவராக இருந்தால், அவரை அடையாளம் கண்டு அந்தப் பணிக்கு பரிந்துரைக்கவும் செய்கிறது.

இந்த பெருநிறுவனங்களில் Unilever மட்டும் மேலும் ஒருபடி மேலே சென்று இன்னொரு தொழில்நுட்பத்தையும் நேர்முகத் தேர்வில் பயன்படுத்துகிறது. இதன்படி, நேர்முகத் தேர்வில் பங்கேற்று பைமெட்ரிக்ஸ் சோதனைகளை முடித்த இளைஞர் HireVue  தளத்தின் விடியோ கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டும். இந்த வீடியோ பதிவில், இளைஞரின் வாய்மொழி பதில், பேச்சு, உடல்மொழி (Nonverbal Communication) போன்றவற்றை கணினியில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏண்ழ்ங்யன்ங் மென்பொருள் ஆராய்ந்து, அந்த நபர் பணிக்கு எவ்வாறு பொருந்துவார் என்பதை கணிக்கும்.

இதுகுறித்து HireVue நிறுவனம் கூறுகையில், தங்களின் இந்தத் தயாரிப்பு, பணியாளர்களை தேர்வு செய்வதில் 90 சதவீதம் வேகமாகவும், ஓர் அமர்வில் 25 ஆயிரம் தரவுப் புள்ளிகளைச் சேகரித்து இதற்கான உளவியலாளர்கள் மூலம் தங்களுடைய இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்வதாகவும் கூறுகிறது. 

இந்த நிலையில், Knack என்ற நிறுவனம் வேலை தேடும் இளைஞர்களுக்கான கணினி விளையாட்டு செயலியை உருவாக்கி வழங்குகிறது. 

இந்த செயலி Apple's App Store, Google Play Store  ஆகியவற்றில் கிடைக்கிறது. இந்த விளையாட்டுகள் மூலம் வெளிப்படும் இளைஞரின் நேர்மறை பண்புகள் நேர்முகத் தேர்வில் நடத்தை பகுப்பாய்வாக இணைக்கப்படுகிறது. 

இந்த Game-ஐ விளையாடும் போது, இந்த செயலியில் உள்ள Knacks- இளைஞரின் தனித்திறனையும், PowerKnacks- ஒருவருக்கொருவர் பாராட்டும்படியான குழு திறனையும், SuperKnacks- ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் பாதையை பரிந்துரைக்கும் திறன்களின் தொகுப்புகளையும் கண்டறிந்து, பணியிடத்தை நிரப்பும் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும்.

எனவே, வேலை தேடும் இன்றைய இளைஞர்கள் நிறுவனங்களின் இந்த புதிய வடிகட்டும் நுட்பங்களை அறிந்து, தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு, கணினி வழியான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவும் பயிற்சி பெறுவது அவசியம்.

முழு கட்டுரையைப் படிக்க →