FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முகம் ஜொலிக்க உதவும் ரோஜாப்பூ  ஃபேஸ் பேக்

ரோஜாப்பூக்களை வீணடிக்காமல், அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

27 ஜனவரி 2024, 10:26 pm IST
பகிர்:

ரோஜாப்பூக்களை வீணடிக்காமல், அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை வைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இவ்வாறு ரோஜாப்பூக்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், முகம் நன்கு பொலிவோடு, அழகான ரோஜாப்பூ நிறத்தில் மின்னும். இப்போது ரோஜாப்பூக்களை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் என்று பார்ப்போம்:

ரோஜாப்பூக்களின் இதழ்களை தண்ணீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் போல் செய்து, சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய்ப் பசை மற்றும் வறட்சியான சருமத்திற்குச் சிறந்தது.

ரோஜாவின் இதழ்களை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை எடுத்து, ஓரளவு அரைத்து, அத்துடன் ஓட்ûஸ பொடி செய்து போட்டு, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின் பாலில் ஒருமுறை கழுவி, ரோஸ் வாட்டர் வைத்து துடைத்து, பின் முகத்திற்கு இந்தப் பேக் போட்டு, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Advertisement

Advertisement

ரோஜா இதழ்களை அரைத்து, அதில் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி, கெட்டியான பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, காய வைத்து, பின் பாலால் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

பருக்கள் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சரியானதாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ரோஜாவின் இதழ்களை அரைத்து, சந்தனப் பொடி சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், அதிகப்படியான எண்ணெய்ப் பசை போன்றவை நீங்கிவிடும்.

ரோஜாவை அரைத்து, சந்தனப் பொடியுடன் சேர்த்து கலந்து, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பாலால் முகத்தில் கழுவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments