மகளிர்மணி

மத்திய அரசின் விருது பெற்ற மாற்றுத்திறனாளி!

பல்வேறு பிரிவுகளில் உடல் சவால்களை கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு  நேஷனல் அவார்டு ஃபார் தி எம்பவர்மெண்ட் ஆஃப்  பர்சன்ஸ் வித் டிசபலிட்டிஸ் என்ற விருது வழங்கி வருகிறது.

தினமணி

பல்வேறு பிரிவுகளில் உடல் சவால்களை கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு  நேஷனல் அவார்டு ஃபார் தி எம்பவர்மெண்ட் ஆஃப்  பர்சன்ஸ் வித் டிசபலிட்டிஸ் என்ற விருது வழங்கி வருகிறது. இதில்  இந்தியாவைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்வர். அந்த வகையில்,   இந்த ஆண்டு தமிழகத்தில்  இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.  இவர்களுக்கு,  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர்-3ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

இதில் தமிழகத்தில் இருந்து பார்வைத்திறன் குறை மற்றும் மனநல வளர்ச்சிக் குறைபாடுள்ள கல்லூரி மாணவியும் பாடகியுமான ஜோதியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றார்.   

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 பேரில்,  ஒரே பெண்னான ஜோதி இசையில் முதுகலைப் படித்து வரும் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு குழந்தையான இவர்,  தற்போது, பிறருக்கு இசையை சொல்லித் தரும் அளவுக்கு வளர்ந்திருப்பதே இவர் விருது பெற காரணம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT