FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாட்டி வைத்தியம்!

செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் நீரில்  5 மிளகு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வர இதய படபடப்பு இதய வலி, இதய குழாய்களில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

1 பிப்ரவரி 2024, 1:51 pm IST
பகிர்:


செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் நீரில்  5 மிளகு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வர இதய படபடப்பு இதய வலி, இதய குழாய்களில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் குடல் புழுக்கள் அழியும், பருமன் மற்றும் கொழுப்பை குறைக்கும்.

அம்மான் பச்சரிசியின் பாலை முகப்பரு மீது தடவினால், முகப்பரு சரியாகும்.

Advertisement

Advertisement

சிறுநீர் உடலில் தேங்கினால் கை கால்களில் வீக்கம் உண்டாகும். கொத்துமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால் சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப் படாமல் வெளியேறும் .

முடக்கத்தான் கீரையை உப்பு மிளகு சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால் உடல் வலி, வாத நோய்கள், பறந்துவிடும் .

மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை சாப்பிட ஞாபக மறதி, உடல் சோர்வு, சளித் தொந்தரவுகள், நீங்கும்.

ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால் மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், மூட்டுவலி நீங்கும்.

கற்பூரத்தையும், மிளகையும், தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை ஒரு துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தில்  ஒத்தடம் கொடுக்க சுளுக்கு சரியாகும்.

இஞ்சி சாறும், சின்ன வெங்காய சாறும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து காலை வேளையில் குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் தேவையான அளவு இன்சுலின் சுரக்கும்.

அரை தேக்கரண்டி சீரகம் தினம் தண்ணீரில்  கொடிக்க வைத்து குடித்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

ஏலக்காயைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம்; ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.

புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட இருமல் குணமாகும். 

வேப்பம்பழத்தை டீ செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல் நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments