ஹோம்மேட் சாக்லேட் ஐஸ் கிரீம்
முதலில் ஒரு பாத்திரத்தில் பால், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தேவையான பொருள்கள்:
பால் - 2 கிண்ணம்
கிரீம் - 1 கிண்ணம்
Advertisement
Advertisement
சர்க்கரை - முக்கால் கிண்ணம்
கோகோ பௌடர், டார்க் சாக்லேட்- தலா அரை கிண்ணம்
வனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பால், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை மிதமான தீயில் வைத்து கொஞ்சம் சூடாக்கவும். பிறகு டார்க் சாக்லேட் சேர்த்து உருகும் வரை கிளறவும். அதற்குப் பிறகு கிரீம், வனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முழுமையாகக் குளிரவைத்து ஒரு பெட்டியில் ஊற்றி ஃப்ரீசரில் 5-6 மணி நேரம் வைத்தால், ருசியான ஹோம் மேட் சாக்லேட் ஐஸ் கிரீம் ரெடி.
நாகஜோதி கிருஷ்ணன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.