FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

கடவுள் கருணைக்கடல். ஆனால் அதிலே நீரெடுக்க நாம் உபயோகிக்கும் வாளிதான் சிறியது.

Updated On : 17 ஜூலை 2015, 9:00 pm IST
பகிர்:

கடவுள் கருணைக்கடல். ஆனால் அதிலே நீரெடுக்க நாம் உபயோகிக்கும் வாளிதான் சிறியது. - கிளென் போர்டு


கடவுள் வாரந்தோறும் சம்பளம் தருவதில்லை. வாழ்க்கை முடிவில் கொடுக்கிறார். - ஹாலந்து

மரணம் எந்தவிதமாகவும் வரலாம். ஆனால் காரணம் மட்டும் கெüரவம் உடையதாக இருத்தல் வேண்டும் - அலெக்ஸாண்டர் புஷ்கின்

Advertisement

Advertisement

புரிந்து கொள்ளாதபோதும் பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான். - சாக்ரடீஸ்

பெண்ணை அழும்படி செய்யாதே. ஆண்டவன் அவள் கண்ணீரை அளந்து பார்ப்பான். - இஸ்ரேல்

என்னுடைய பாட்டனார் யார் என்பதை நான் அறியேன். ஆனால் நான் கவலைப்படுவதெல்லாம் அவருடைய பேரன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்பது பற்றியே. - ஆபிரஹாம் லிங்கன்

தாய் உன்னைப் பத்துமாதங்கள் சுமந்தவள். மூன்று பால் கொடுத்து வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி நடந்து விடாதே. - முகம்மது நபி

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாகச் செய். நாளை அதனிலும் நன்றாகச் செய்யும் ஆற்றல் நீ பெறக்கூடும். -நியூட்டன்

நாம் எந்தச் செயல்களைச் செய்வதென்று முடிவு செய்வோம். நாம் செய்யும் செயல்கள் நம்மை இத்தகையவர் என்று முடிவு செய்யும். -வெர்ன்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments