FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

நூலினைப் பகுத்துணர்

ஈகிள் கேர்ள் சாகசங்கள் (வீரா காமிக்ஸ்) - ஜெ.வீரநாதன்; பக்கம்: 76; ரூ.200; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயமுத்தூர், திருச்சி; 98422 13782.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
பகிர்:

ஈகிள் கேர்ள் சாகசங்கள் (வீரா காமிக்ஸ்) - ஜெ.வீரநாதன்; பக்கம்: 76; ரூ.200; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயமுத்தூர், திருச்சி; 98422 13782.

கடந்த நூற்றாண்டில் சிறுவர்களுக்கான படக்கதைப் புத்தகங்கள் தமிழில் நிறைய வெளிவந்தன. அவை அன்றைய சிறுவர்களுக்கு ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க உதவின. இப்போது, சிறுவர்களின் ஓய்வுநேர வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. அந்த நேரத்தை அவர்கள் சமூகவலைதளங்களில் செலவிடத் தொடங்கிவிட்டனர். காமிக் புத்தகங்களின் எண்ணிக்கையும் அருகிவிட்டன.

ஈகிள் கேர்ள் மிகுந்த துணிச்சல் மிக்கவள். தவறு செய்பவர்களை எதிர்த்துப் போராடுபவள். ஆபத்துக் காலத்தில் தைரியமாக முடிவெடுப்பவள். இயற்கையுடன் இணைந்து வாழ்பவள். உருவத்தை மாற்றிக் கொள்பவள். பெரிய இறகுகளைக் கொண்டு வானத்தில் பறப்பவள். விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களிடமும் நட்புடனும் அன்புடனும் பழகுபவள். அனைவரையும் பாதுகாப்பவள். டெலிபதி என்னும் உணர்வுச்செய்தி மூலம் செய்திகள் அனுப்பவும், பெறவும்கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவள். படக்கதை வடிவில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தில் மொத்தம் 11 கதைகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

விலங்குகளுக்கு உதவுதல் என்றொரு கதை. அதில், யானைகளைக் கொன்று தந்தங்களையும், புலிகளைக் கொன்று தோலையும், பல்லையும் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து, அநியாய வழியில் பணம் சம்பாதிக்கும் சமூக விரோதிகள் காட்டுக்குள் நுழைகிறார்கள். அதையறிந்து பூச்சிகளுக்கு டெலிபதி மூலம் செய்தியனுப்பி, விலங்குகளை மறைவிடத்தில் பதுங்கிக்கொள்ள அறிவுறுத்துகிறாள் ஈகிள் கேர்ள். வேட்டையில் எதுவும் கிடைக்காமல் நடுக்காட்டுக்குள் வந்துவிட்ட சமூக விரோதிகளை தேனீக்களின் பெரும் படையை அனுப்பி, கடுமையாகத் தாக்கி நிலைகுலையச் செய்து விரட்டியடிக்கிறாள்.

இப்படி, இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் சுவாரசியமாக ஈகிள் கேர்ளின் வீரதீர பராக்ரமங்களைப் பறைசாற்றுகின்றன. கதைக்குப் பொருத்தமான படங்கள் அனைத்தும் ஏ.ஐ.-யால் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments