FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலகம் பலவிதம்

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில், கல்வி நிறுவனம் ஒன்று 75-ஆவது ஆண்டு விழாவுக்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தியது.

5 செப்டம்பர் 2026, 9:58 pm IST
பகிர்:

ஆர்.எஸ்.

ஓடினார் மகளுக்காக...

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில், கல்வி நிறுவனம் ஒன்று 75-ஆவது ஆண்டு விழாவுக்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தியது. இதில் வெறும் காலுடன் ஓடி முதல் பரிசு பெற்றார் 47 வயதான ரமாபாய் ரன்வீர். முதல் பரிசு ரூ.3,000.

Advertisement

Advertisement

அவர் இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் முடிவு திடீரென ஏற்பட்டது. கணவரை இழந்த பிறகு வீட்டுவேலை செய்து வரும் ரமா பாய், பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் கிடைத்தால் மகளுக்கு பாடப்புத்தகம், கல்விக் கட்டணத்துக்கு உதவுமே என்று நினைத்தார். ஓட்டத்தில் இறங்கிவிட்டார்.

அடித்துச்சென்றது பணம்

நேபாளத்தில் அண்மையில் நேரிட்ட திடீர் ஆற்று வெள்ளத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.20 வங்கிகள் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த வங்கிகளின் பணப்பெட்டிகளும் வெள்ளத்தில்.

இதில் ரொக்கப் பணம், அடகு நகைகள் என எல்லாமும் வெள்ளத்தில் மறைந்துவிட்டன. தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதனிடையே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி ஒன்றின் பீரோவை உடைத்து 92 லட்சம் ரூபாய் திருடியதாக 29 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடித்ததற்காக முடி கொடுத்தார்...

தாய்லாந்து தலைநகர், பாங்காக்கில் பிங்லாவோ என்ற மதுக்கூடத்துக்கு 18 வயதுப் பெண் வந்தார். அவர் இந்த மதுக்கூடத்துக்குள் நுழைவதற்கு போலியான அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். உள்ளே வந்தவர், நிறைய சாப்பிட்டார். நிறைய மது அருந்தினார்.

இந்திய மதிப்பில் ரூ.1.7 லட்சம் பில் தொகை வந்தது. ஆனால், இவர் பணத்தைச் செலுத்தாமல் தப்பிச்செல்ல முயன்றார். பிடித்து மொட்டை போட்டு அனுப்பிவிட்டார்கள். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் 'ஓர் இளம்பெண் மீதான அத்துமீறல்' என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், 'தலைமுடி விற்பனைக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்' என்கிறது அந்த நிறுவனம்.

ஆளுடன் ஆட்டோவையும்...

மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை அண்மையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் அனைவரும் மராத்தி பேசத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். பல ஆட்டோ டாக்சி டிரைவர்கள் பீகார், உ.பி. உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்கள்.

ஆகவே மராத்தி பேசவராதவர்கள் ஊருக்குக் கிளம்புகிறார்கள். ஆட்டோ டிரைவர் ஒருவர், பெட்டி படுக்கையுடன், தன் ஆட்டோவையும் லக்னௌவுக்கு ரயிலில் ஏற்றிச் சென்றது வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments