முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சினி மினி

இன்றைய தேதியில் சென்னை தவிர ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கிப் போட்டிருக்கிறார் அனுஷ்கா. நடிகைகளில் நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் அதிபர் அனுஷ்காதான் என்கிறது சினிமா வட்டாரம்.

Updated On : 24 நவம்பர் 2012, 4:09 pm IST
பகிர்:

இன்றைய தேதியில் சென்னை தவிர ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கிப் போட்டிருக்கிறார் அனுஷ்கா. நடிகைகளில் நம்பர் ஒன் ரியல் எஸ்டேட் அதிபர் அனுஷ்காதான் என்கிறது சினிமா வட்டாரம்.

"விஸ்வரூபம்' படத்தின் ஹை லைட்டான காட்சிகள், முன்னதாகவே "துப்பாக்கி' படத்தில் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் பரவின. இது குறித்து கேட்டால்... ""அவ்வாறு வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை. அது வேறு களம், எங்களுடைய "விஸ்வரூபம்' வேறு களம்'' என கமல் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழில் இரண்டு, தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒன்று என நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ.1 கோடியே 25 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தற்போது தெலுங்கிலும் ஹிந்தியிலும் ஐந்து படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

ராதாகிருஷ்ண ஜகர்லமுடி இயக்கத்தில் ராணாவுடன் நயன்தாரா நடித்துள்ள தெலுங்குப் படம் "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்'. இந்தப் படத்தில் கதையும் நயன்தாராவின் கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளதாக தெலுங்குப் பட வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து தேசிய அளவில் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படத்தில் தானே சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதாக இயக்குநரிடம் கேட்டிருக்கிறார் நயன்தாரா. இதற்கு சம்மதம் தெரிவித்ததோடு இரண்டு ஆசிரியர்களையும் நியமித்து தெலுங்கு பேச பயிற்சி கொடுத்துள்ளார் இயக்குநர். இதையடுத்து முதல் முறையாக தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் நயன்தாரா.

ஹிந்தியில் ஹிட் ஆன "டெல்லி பெல்லி' படம் தமிழில் "சேட்டை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கண்ணன் இயக்கத்தில் ஆர்யா, அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடிதான் "ஹை லைட்' என்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் "காமெடி சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழியையும் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர். இதற்கு சந்தானமும் ஓ.கே. சொல்லியிருக்கிறார்.

ரஜினிகாந்தின் "சிவாஜி' படம், ரூ.10 கோடிக்கும் அதிகமான செலவில் "3 டி' வடிவில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. "படத்தை உங்களுடைய பிறந்த நாளான 12-12-12 அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்' என ஏவி.எம். நிறுவனம் ரஜினியிடம் தெரிவிக்க அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்திருக்கிறார். இந்த ஆண்டு ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்த நாள் பரிசு இந்தப் படம்தான்.

"துப்பாக்கி' படத்தின் வெற்றியை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ரூ.15 கோடி வரை சம்பளம் தரத் தயாராக இருந்த பல பாலிவுட் புள்ளிகள் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்தார்கள். படம் மும்பையிலும் ஹிட் ஆகியுள்ளதால் ஏ.ஆர்.முருகதாஸின் சம்பளம் இன்னும் உயரத் தொடங்கியுள்ளது. "துப்பாக்கி'யின் ஹிந்தி ரீமேக்கை அக்ஷய்குமாரை வைத்து இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

பரவலான பாராட்டுகளைப் பெற்ற "தோனி' படத்தையடுத்து பிரகாஷ்ராஜ் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்று, ஸ்வேதா மேனனுக்கு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்த "சால்ட் அண்டு பெப்பர்' படத்தைத்தான் ரீமேக் செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் தபு. படத்துக்கு பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுக்குமாறு தனது ஆஸ்தான இயக்குநர் ராதா மோகனிடம் கேட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments