FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பரமம் பவித்ரம்: 171 கோயில்களில் உழவாரப் பணி...

சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் பண்பாட்டு கலாசார அமைப்பான கலாசார வளர்ச்சிக்கான இளைஞர்கள் அமைப்பு (ஒய்.ஏ.சி.டி.) 1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 4:01 am IST
பகிர்:

சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் பண்பாட்டு கலாசார அமைப்பான கலாசார வளர்ச்சிக்கான இளைஞர்கள் அமைப்பு (ஒய்.ஏ.சி.டி.), 1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 700 உறுப்பினர்களோடு பண்பாடு, சமூகப் பொறுப்பு, சமூக சேவை, ஆன்மிகம், ஒழுக்கம், தேசப்பற்று போன்றவற்றை மையப்படுத்தி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை, கலாசார, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது.

'பரமம் பவித்ரம் என்ற திட்டத்தின்படி, தேசிய அளவில் மூன்று ஆண்டுகளில் 171 கோயில்களில் உழவாரப் பணிகளில் இந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதன் அறங்காவலர்களும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தம்பதியுமான ஆர். கிருஷ்ணமூர்த்தி, சுபா ஆகியோரிடம் பேசியபோது:

'ஒய்.ஏ.சி.டி. அமைப்பின் கீழ் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா நிகழ்ச்சி, மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், கிரிக்கெட் போட்டி, சமையல் போட்டி, குடிசைப் பகுதிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, ரத்த தான முகாம்கள், வெள்ளப் பாதிப்புள்ளானோருக்கு உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம்.

Advertisement

Advertisement

இந்தியப் பாரம்பரியத்தில், தூய்மை என்பது உடல் சார்ந்ததோடு மட்டும் கிடையாது. ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. கோயில்கள் நாட்டின் கலாசாரம், நாகரிகத்தின் வேர் என்பதை உணர்ந்த இளைய சமுதாயத்தை ஈடுபடுத்துவது மிகவும் அவசியம் என்பதை மையமாகக் கொண்டு, 'பரமம் பவித்ரம் திட்டத்தை 2023ஆம் ஆண்டில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த சுவாமி கெளதமானந்த மகாராஜ் தொடக்கி வைத்தார். கோயில்களின் தூய்மை, புனிதத்தைக் காத்தல், இளம் தலை

முறைக்கு சமூகப் பொறுப்பும் ஆன்மிக மதிப்புகளும் கற்பித்தல், பாரம்பரிய கோயில்கள் மீது பொதுமக்களின் உரிமை உணர்வை வளர்த்தல், தன்னார்வலர்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான பராமரிப்பு முறை உருவாக்குதல் ஆகியவையே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வம் கொண்ட ஆன்மிக அன்பர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், குடும்பத் தலைவிகள் என 100 பேர் வரை தூய்மைப் பணிகளுக்கான உபகரணங்கள், பொருள்களையும் கோயில்களுக்கு எடுத்துச் செல்கிறோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து கோயில் வளாகத்தையும், பிரகாரங்களையும் சுத்தம் செய்கிறோம். அன்றாடம் பயன்படுத்தப்படும் விளக்குகள், பூஜை சாமான்களையும் 'பளிச்சென்று தேய்த்து அளிக்கிறோம்.

எங்கள் பணியின்போது, உள்ளூர் மக்களிடம் கோயில்களை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். 2023 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலகட்டத்தில் 171 கோயில்களில் உழவாரப் பணியை மேற்கொண்டிருக்கிறோம்.

சென்னையில் தொடங்கிய இந்தப் பணி நாட்டின் பல்வேறு கோயில்களிலும் விரிவடைந்திருக்கிறது. குறிப்பாக குருவாயூர், மம்மியூர், சிருங்கேரி, உடுப்பி, திருப்பதி, மந்திராலயம், வடக்கே பிரயாக் ராஜ் உள்ளிட்ட கோயில்களில் சேவை செய்துள்ளோம்.

'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி இந்த சேவைக்கு உறுதுணையாக இருக்கிறார்.

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கும், கௌகாத்தியில் உள்ள காமாக்கிய கோயிலுக்கும் சென்று உழவாரப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது எங்கள் லட்சியம் என்கின்றனர் கிருஷ்ணமூர்த்தி, சுபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments