முகப்பு

சின்ன திரை

பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி, 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில், டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

59 வினாடிகள் முன்பு
சின்ன திரை
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி, 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில், டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஐந்தாவது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராதவிதமாக ராகவ் அறுவைச் சிகிச்சை காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் நடைபெற்ற டைமண்ட் திருடும் டாஸ்க்கில் அட்டகாசமாக விளையாடி ரசிகர்கள் மனதை வென்றார் டிடிஎஃப் வாசன். அதனால் இந்த வாரம் நன்றாக விளையாடும் டாஸ்க்கை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி, வீட்டை இரண்டாகப் பிரித்து ப்ளூ, ரெட் என இரண்டு அணிகளாக 8 - 8 பேர் பிரிந்தனர். இந்த டாஸ்குக்கு 'சர்வைவல் டாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

---------------

சேட்டிலைட் சேனல்கள் அதிகரிக்கும் சூழலில், ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டு புதிய ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இளம்தலைமுறையினரைக் கவரும் வகையிலான 'சிங்கிள் பசங்க' என்ற புதிய ரியாலிட்டி ஷோ மூலம், பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியன ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதற்கு நடிகர் பார்த்திபன் நடுவராக உள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.