FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளாகம் - 2

வளாகம் - "வளா' என்றால் சுற்றுப்பரப்பு. "அகம்' என்றால் இடம். எனவே, "வளாகம்' என்றால் சுற்றிச் சூழ்ந்த இடம் என்று பொருள். சான்று:    ""அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்  கோடின்றி நீர்நிறைத் தற்று'' (கு

2 ஜனவரி 2024, 11:42 pm IST
பகிர்:

வளாகம் - "வளா' என்றால் சுற்றுப்பரப்பு. "அகம்' என்றால் இடம். எனவே, "வளாகம்' என்றால் சுற்றிச் சூழ்ந்த இடம் என்று பொருள். சான்று:

 ""அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

 கோடின்றி நீர்நிறைத் தற்று'' (குறள்-523)

Advertisement

Advertisement

 ÷குளம் வளா - குளவளா = குளத்தின் சுற்றுப்பரப்பு.

 "வளாகம்' என்னும் சொல் தனக்கு முன் எந்தச் சொல் நிற்கிறதோ, அந்தச் சொல்லின் பொருளைத் தழுவி அதற்குரிய இடமாகப் பொருள் தரும். இதற்கு இலக்கியச் சான்றுகளாவன:

 ""புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்'' (தேவாரம்)

 (ஐம்புலன்களையும் வென்றவர்கள் சூழ்ந்துள்ள இடம்)

 ""திரைதரும் முந்நீர் வளாகம் எல்லாம்'' (கலி.146:28)

 (அலைதரும் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும்)

 ""ஏழ்பெரு வளாக வேந்தர்'' (கம்ப.யுத்த:766)

 (பெரிய நிலம் (இடம்)- கொண்ட வேந்தர்)

 ""குன்றும் யாறும் குவடும் வளாகமும்'' (கு.குறவஞ்சி)

 (சுற்றிச் சூழ்ந்த தினைப்புனப் பரப்பும்)

 ÷இவ்வாறு பலவகை இடப்பொருள் தரும் வளாகம் என்ற சொல் "ஞானவான்கள் கூடும் இடம்' என்னும் ஒரு பொருள் தரும் சொல்லாகக் கூறி அதன் பொருள் வளத்தைக் குறைத்துக் காட்டுவதை ஒருபோதும் "ஞானவான்கள்' ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 ÷இன்றைய நிலையில், பள்ளி வளாகம், கல்லூரி வளாகம், கோயில் வளாகம், வணிக வளாகம் போன்று வளைத்துச் சுற்றுச்சுவர் அல்லது, சுற்றடைப்பு எழுப்பப்பட்டுள்ள பகுதிக்குள் உள்ளடக்கிய பரப்பை அல்லது இடத்தைக் குறிக்கும் சொல்லாக நின்று வருமொழியை (முன்னிற்கும் சொல்லை)த் தழுவிப் பலபொருள் அல்லது பல இடங்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது எனக் கொள்வதே சரியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments