நூறு வயது வரம் கேட்ட பாரதி!
செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்! வையந் தனையும் வெளியினையும்
செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்!
வையந் தனையும் வெளியினையும்
வானத் தையும்முன் படைத்தவனே!
ஐயா! நான்மு கப்பிரமா!
யானை முகனே! வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே!
கமலா சனத்துக் கற்பகமே!
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறுவயது
இவையும் தரநீ கடவாயே!
"விநாயகர் நான்மணி மாலை'யில்
பாரதியார் பாடிய விருத்தங்களிலிருந்து...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.