FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்க மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு இந்தியா விசா மறுப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.
 இதுகுறித்து வாஷிங்டனில் அந்த ஆணையத்தின் தலைவர் ராபர்ட் பி. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 இந்திய அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரைச் சந்திக்கும் பொருட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந் திர ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் ஒரு வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், எங்கள் ஆணைய உறுப்பினர்களுக்கு இந்திய அரசு நுழைவு இசைவு வழங்குவதற்கு மறுத்துவிட்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார் ராபர்ட் பி. ஜார்ஜ்.
 அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்கள், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளில் மதச் சுதந்திரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆணைய உறுப்பினர்களின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments