பப்புவா நியூ கினியா தீவுப்பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அபாயம்?
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியா தீவுக்கு கூட்டத்தில் உள்ள போகைன்வில் தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெல்லிங்டன்: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியா தீவுக்கு கூட்டத்தில் உள்ள போகைன்வில் தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி ஏற்படுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் உள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவு கூட்டத்தில் போகைன்வில் தீவும் ஒன்று. அங்கு இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அங்கே இருக்கும் அராவா பகுதியில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கமானது , தரைப்பகுதியில் இருந்து 154 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.