FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கனில் குண்டு வெடிப்பு: 26 பேர் பலி

ஆப்கனில் மல்யுத்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


ஆப்கனில் மல்யுத்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆப்கனில் உள்ள மெய்வான்ட் விளையாட்டு கிளப்பில் பயங்கரவாதிகள் இந்த படுகொலை சம்பவத்தை நடத்தியுள்ளனர். அந்த கிளப்பில் எப்பொழுதும் போல் வீரர்கள் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு உடலில் வெடிகுண்டுகளை மறைத்து வந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார்.
மல்யுத்த வீரர்களுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சிலர் 10 வயது சிறுவர்கள்.
இந்த சம்பவத்துக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு, கிளப்புக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்தினர். செய்தியாளர்கள், அவசர கால பணியாளர்களை குறிவைத்து அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில், ஆப்கனின் மிகப்பெரிய தனியார் துறை ஒலிபரப்பு நிறுவனமான டோலூ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். 
இந்த தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 91 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments