சீனாவில் கார் தாக்குதல்: 11 பேர் பலி
சீனாவில் சொகுசு காரை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் சொகுசு காரை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணம் ஹெங்டாங் மாவட்டத்தில் உள்ள சதுக்கத்தில் குழுமியிருந்த பொதுமக்கள் மீது புதன்கிழமை இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சொகுசுக் காரை ஓட்டி வந்த யங் ஸன்யுன் (54) வேண்டுமென்றே கூட்டத்தின் மீது மோதியுள்ளார். அதன்பின்னர் கலவரமடைந்த கூட்டத்தின் இடையே புகுந்து பொதுமக்களை கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் பரிதாபமாக 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 44 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள் ஆவர்.
விபத்து நடந்த பகுதியை உடனடியாக சுற்றி வளைத்த உள்ளூர் போலீஸார் யங்கை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கார் தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டுநர், ஏற்கெனவே வழிப்பறி மற்றும் போதை மருந்து கடத்தலில் சிக்கி தண்டனைப் பெற்றவர். மேலும், அவருக்கு இரப்பை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.