முகப்பு
உலகம்

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கை தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் 

கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்.. 

Updated On : 23 ஏப்ரல் 2019, 3:33 pm IST
பகிர்:

கொழும்பு: கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.  

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 310 பேர் மரணமடைந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 24 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது, அடிப்படைவாத சிந்தனை கொண்ட ஒருவன் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொழும்புவில் அந்நாட்டின் பாரா மன்றத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, 'இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவில் கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கையில் தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments