FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வியட்நாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு, 34 பேர் காணவில்லை

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 19 அக்டோபர் 2020, 12:29 pm IST
90 dead, 34 missing in central Vietnam's floods, landslides
பகிர்:

ஹனோய்: வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாக வியட்நாமின் மத்திய பிராந்தியத்தில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் சிக்கி 90 பேர் உயிரிழந்துள்ளன, மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக இயற்கை பேரழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

குழுவின் அறிக்கையின்படி, 
குவாங் ட்ரை, துவா தியென் ஹியூ மற்றும் குவாங் நாம் ஆகிய மாகாணங்களில் இந்த இறப்புகள் முக்கியமாகப் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

குவாங் ட்ரை மற்றும் துவா தியென் ஹியூ ஆகிய இடங்களில் சுமார் 37,500 வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 1,21,700 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய வியட்நாமில் அக்.21 வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சில பகுதிகளில் 600 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments