உலகம்

அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி என தகவல்!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி லியோ கோசின்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

வர்ஜீனியாவின் செசாபீக் நகரத்தில் உள்ள வால்மார்ட் அங்காடியில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? இதுவரை எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT