உக்ரைன் போரில் இதுவரை 115 குழந்தைகள் பலி
உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 140க்கும் அதிகமான குழந்தைகள் படுகாயம் அடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நோட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில், ரஷியாவின் தலைநகர் கீவ், கார்கீவ், துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது.
படிக்க | இலங்கையில் காகிதத் தட்டுப்பாடு: பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
உக்ரைனை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இருந்தபோதிலும் அரசுக் கட்டடங்கள், விடுதிகள், திரையரங்குகள் என்று மக்கள் கூடியுள்ள இடங்களை நோக்கி ரஷிய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் ராணுவத்தினரும் ரஷிய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனைச் சேர்ந்த 140க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போரில் பங்கேற்றவர்கள் அல்ல. உக்ரைனில் பல்வேறு குடும்பங்களின் துன்பநிலையையும், உக்ரைனின் துயரத்தையும் இது காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.