FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

2 பிப்ரவரி 2024, 12:10 am IST
கோப்புப்படம்
பகிர்:

வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துவது விலக்கிக் கொள்ளப்பட்டது. கரோனா வேகமாக பரவும் சூழலில், 3 ஆண்டாக அமலில் இருந்த தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை சீனா தளர்த்தியுள்ளது.

சீனாவில் வூஹான் நகரில் உருவான கரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. எல்லைகள் மூடப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பை அந்நாட்டு சுகாதாரப் பட்டியலில் "ஏ" பிரிவில் வைத்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வந்தது. 

Advertisement

Advertisement

முன்னதாக, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அரசு விடுதிகளில் இரண்டு வாரம் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. இது படிப்படியாக மூன்று நாள்கள் கண்காணிப்புடன் ஐந்து நாள்களாகக் குறைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று சீனாவில் மீண்டும் பரவி வருவதையடுத்து, பல்வேறு செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய போராட்டங்களை அந்நாட்டு எதிர்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை சீனா தளர்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments