முகப்பு
உலகம்

இந்தியாவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது...: ஈரான் அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரானிய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Updated On : 7 நவம்பர் 2023, 12:55 pm IST
பகிர்:

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான அலைபேசி கலந்துரையாடலில், இந்தியா தனது முழு திறனையும் பயன்படுத்தி இந்தப் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இருநாட்டு தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குறித்து ஈரானிய அரசு வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரானிய அதிபர் இந்தியா மேற்குலக நாடுகளின் காலனியத்துக்கு எதிராக போராடியதையும் ஒத்துழையாமையை உலகுக்கு அளித்த நாடு என்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

“இன்று, இந்தியாவிடம் எதிர்பார்ப்பது அதன் அத்தனை திறன்களையும் பயன்படுத்தி யூத ஆதிக்கத்தினால் காஸாவில் நடக்கும் குற்றங்களை நிறுத்த வேண்டும்” என அதிபர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இஸ்ரேலின் முற்றுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் உடனடி போர் நிறுத்தத்திற்காகவும் மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சிக்கு ஈரான் ஆதரவளிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி போர் விரிவாவதைத் தடுப்பது குறித்தும் வாழ்வாதார உதவிகள் கிடைக்கப் பெறுவதையும் அமைதியும் நிலைத்தன்மையும் அந்தப் பகுதிகளில் திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசியுள்ளார்.

மேலும், வெள்ளிக்கிழமை (நவ.3) ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் உடன் மோடி பேசினார். இரு தலைவர்களும் போர்ப் பகுதிகளில் பாதுகாப்பான மற்றும் மனிதத்துவ சூழல் விரைவில் திரும்ப தீர்வு காண ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments