FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

'போருக்குப் பிறகு காஸாவின் பாதுகாப்பு இஸ்ரேலிடம் இருக்கும்' - பிரதமர் நெதன்யாகு

போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

2 பிப்ரவரி 2024, 8:48 am IST
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
பகிர்:

போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 32 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறி வருகிறார். 

Advertisement

Advertisement

இந்நிலையில் ஏபிசி செய்தி ஊடகத்திற்கு திங்கள்கிழமை பிற்பகல் அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுடனான போருக்குப் பிறகு காஸாவில் ஒட்டுமொத்த பாதுகாப்பு பொறுப்பு இஸ்ரேலிடம் இருக்கும், இது காலவரையற்ற காலமாக இருக்கும் என்று கூறினார். 

மேலும், பிணைக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறிய அவர், குறுகிய கால இடைவெளியில் போர் நிறுத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 

அவர் பேசியதன் அடிப்படையில், சுமார் 23 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வசிக்கும் காஸா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இஸ்ரேல் விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போரில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் உயிரிழப்பு 10,000-யைக் கடந்துள்ளது. இதில் 4,100 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தரப்பில் 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments