FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மார்க் ஜூக்கர்பெர்க்!

மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவியின் பிறந்தநாளில், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரல்

Updated On : 2 மார்ச் 2025, 2:11 pm IST
மனைவி பிரிஸில்லாவுடன் மார்க் ஜூக்கர்பெர்க் - Instagram | Mark Zuckerberg
பகிர்:

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் மனைவியின் பிறந்தநாளில், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மனைவியான பிரிஸில்லாவின் 40 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கிராமி விருது பெற்ற அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் அணிந்த ஆடையைப் போன்று அணிந்து அதன் மீது கருப்பு உடையை அணிந்து, மார்க் ஜூக்கர்பெர்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, மனைவி பிரிஸில்லாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆடைகளைக் களைந்து பாடகரின் உடையில் நிகழ்ச்சியில் மார்க் வலம் வந்தார். மார்க்கின் இந்த செயல்பாடு, பிரிஸில்லாவின் சிரிப்பலையை நிகழ்ச்சி முழுவதும் ஆட்கொள்ள வைத்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான விடியோக்களை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்ட மார்க் ஜூக்கர்பெர்க்குக்கும் பிரிஸில்லாவுக்கும் 3 மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments