FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டிய சம்பவத்தில் இருவா் கைது

சமூக ஊடகங்களில் துப்பாக்கியைக் காட்டியதாக இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். நரேலா பகுதியில் அவா்களிடமிருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள் மற்றும் ஆறு தோட்டாக்கள் பறிமுதல்

29 September 2026, 9:53 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சமூக ஊடகங்களில் துப்பாக்கியைக் காட்டியதாக இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். நரேலா பகுதியில் அவா்களிடமிருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள் மற்றும் ஆறு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்டவா்கள் சங்கா் (25), ரோஷன் ஜா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். முன்னதாக, சமூக ஊடகங்களில் ஒருவா் துப்பாக்கியைக் காட்டுவது குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.

தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் கள ஆய்வின் மூலம் அந்த நபா் சங்கா் என அடையாளம் காணப்பட்டாா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும், தோட்டாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையின்போது, ​​அந்தத் துப்பாக்கியை ஜா என்பவா் தனக்கு கொடுத்ததாக சங்கா் தெரிவித்தாா். இதையடுத்து, ஜா கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரோஹிணியில் உள்ள பவானா- பாத்லி கால்வாய்கள் அருகே மற்றொரு துப்பாக்கியையும் வெடிமருந்துகளையும் மறைத்து வைத்திருந்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.

ஜா ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் ஆவாா். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments