மார்க் கார்னி  AP
உலகம்

கனடாவின் பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!

கனடா பிரதமர் மார்க் கார்னி பதவியேற்பு நிகழ்வு பற்றி...

DIN

கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி (59) நாளை(மார்ச் 14) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா தொடர்பான அறிவிப்பை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. முன்னதாக கனடாவின் பிரதமராகவுள்ள ஐஸ்டின் ட்ரூடோ, முறைப்படி ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சுழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றார்.

இதையடுத்து, கனடாவின் 24-வது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அமைச்சர்களையே மார்க் கார்னி தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க், வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் ஆகிய முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிகிறது.

கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக்கும் டிரம்பின் திட்டத்துக்கு மத்தியில், மார்க் கார்னி புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கார்னி, ”அமெரிக்கா தரப்பு கனடாவுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளைப் பின்பற்றி, அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வரி விதிப்பை கனடாவின் புதிய பிரதமர் எப்படி கையாளப் போகிறார் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

SCROLL FOR NEXT