மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!
மெக்சிகோ நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து...
மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் நிலச்சரிவில் முழுவதுமாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 76 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ அரசு நேற்று (அக். 20) அறிவித்துள்ளது.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், இணைப்பு வழிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் பெசோஸ் (ரூ.4.8 ஆயிரம் கோடி) நிவாரண நிதியை அளிப்பதாகவும், அதிபர் ஷீன்பாம் அறிவித்துள்ளார்.
இந்தப் பேரிடரில், அதிகம் பாதிக்கப்பட்ட ஹிடால்கோ மற்றும் வெராக்ரூஸ் ஆகிய மாநிலங்களில், மெக்சிகோ பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 12,700 வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸாவில் மீண்டும் தாக்குதல்: குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலி!
The death toll from floods and landslides in Mexico has risen to 76, it has been reported.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.