இஸ்லாமாபாதில் ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! ஆனால், சீனா செல்கிறார் பாக். அதிபர்!
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி சீனா செல்வது குறித்து...
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் செல்கிறார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி சனிக்கிழமை (ஏப். 25) சீனா நாட்டுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்வதாக, சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் ஏப். 28 வரையிலான இந்தப் பயணத்தில் அவர் சீனாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதிபர் சர்தாரி வரும் ஏப்.25 முதல் ஏப். 27 வரையில் ஹுனான் மாகாணத்தின் சாங்க்ஸா நகரத்திலும், ஏப். 28 முதல் மே 1 ஆம் தேதி வரை ஹைனான் மாகாணத்தின் சன்யாவிலும் பயணம் மேற்கொள்வதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பயணத்தில், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் சுமார் 10 நாள்களுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இத்துடன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் அரசின் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதில், பங்கேற்க ஈரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத் சென்றுள்ள நிலையில், அதிபர் சர்தாரி திடீரென வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan President Asif Ali Zardari is traveling to China on a state visit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.